
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஆதியின் கிளாப்
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் மக்கள் ஓரளவிற்கு தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இன்னும் பழையபடி மக்கள் வரவில்லை. "கிளாப்" படம் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கியுள்ளது. நல்ல விலை கிடைத்ததால் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் எனச் சொல்கிறார்கள்.
ஆதி தெலுங்கில் நடித்து கடைசியாக வெளிவந்த "குட் லக் சகி" படம் தியேட்டர்களில் வெளியானது. அப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் "தி வாரியர்" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஆதி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!