
முதல் சிங்கிள் மோதலுக்குத் தயாராகும் விஜய், மகேஷ் பாபு ரசிகர்கள்
இதனிடையே, விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள "பீஸ்ட்" படத்தின் முதல் சிங்கிளும், மகேஷ் பாபு நடித்து அடுத்து வெளிவர உள்ள "சர்க்காரு வாரி பாட்டா" படத்தின் முதல் சிங்கிளும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளன. இருவரது சிங்கிள்களில் யாருடைய பாடல் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கப் போகிறது என்பது குறித்து இப்போதே இருவரது ரசிகர்களும் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய் படங்களின் பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள் ஆகியவைதான் எப்போதும் யு டியுபில் அதிக சாதனைகளைப் படைக்கும். அவற்றோடு ஒப்பிடும் போது மகேஷ் பாபு படங்கள் படைத்த சாதனைகள் குறைவுதான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!