ஹிந்தியிலும் சக்ரா வெளியீடு
பிப் 14, 2021
Advertisement
எம்.ஆஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்துள்ள படம் "சக்ரா". ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைபர் கிரைம் உலகை மையப்படுத்தி, திரில்லர் பாணியில் தயாராகி உள்ள இப்படம் பிப்., 19ல் வெளியாகிறது. முதன்முறையாக விஷாலின் படம் ஹிந்தியிலும் வெளியாகிறது.
விஷால் கூறுகையில், ""தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சி. “சக்ரா” பட டிரைலரை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். ஹிந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது நம்பிக்கை தந்துள்ளது. “சக்ரா கா ரக்சக்” என்ற பெயரில் ஹிந்தியில் வெளியிடுகிறோம். இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!