கடின உழைப்பு, பிரார்த்தனைக்கு கிடைத்த பலன் : ‛ஜெயிலர் 2 பற்றி பூர்ணா நெகிழ்ச்சி
அக் 19, 2026
Advertisement
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‛ஜெயிலர் 2" படம் வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த படத்தில் அனிருத் இசையில் ‛அல்ல பொலேலோ" பாடலுக்கு நடிகை பூர்ணா நடனமாடியிருந்தார். இதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் பூர்ணா.
அவர் கூறுகையில், “ரஜினி மாதிரி ஸ்டைல் ஐகான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அவருடன் திரையை பகிர்ந்து கொள்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வாய்ப்பை எனக்கு பரிந்துரை செய்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி. இவ்வளவு பிரமாண்டமான படத்தில் மூன்று நிமிடப் பாடலில் இடம்பெறுவேன் என நினைக்கவில்லை. கடின உழைப்பு, பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. பெரிய படைப்பில் இடம்பெற வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது"" என்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!