கோயம்புத்தூரில் உருவான கேசினோ
ஜூலை 07, 2022
Advertisement
மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் அதன்பிறகு பெண்குயின் படத்தில் நடித்தார். தற்போது அவர் தனது நண்பருடன் இணைந்து தயாரித்து நடிக்கும் படம் கேசினோ. வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், "எரும சாணி" அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் தியாகராஜன், ஸ்டான்லி சேவியர் இசை அமைக்கிறார்கள், மார்க் ஜோயல் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. பணத்தை தேடி ஓடும் மனிதர்களும், அவர்களின் குணாதிசயமும்தான் படத்தின் கரு என்கிறார் மார்க் ஜோயல்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…