
கடைசி விவசாயி படைத்த புதிய சாதனை
தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கவுரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம் தற்போது மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது.
உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் "லெட்டர் பாக்ஸ்" எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் கடைசி விவசாயி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ‛ஆர்.ஆர்.ஆர்" படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த "விக்ரம்" படம் 11வது இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!