2 பில்லியன் வசூலை நெருங்கும் அவதார் 2
ஜன 18, 2023
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் "அவதார் த வே ஆப் வாட்டர்". இப்படம் தற்போது வரை 1.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் 15460 கோடி. அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூல், அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வசூலித்துள்ளது இந்தப் படம்.
இப்போது "ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்" படத்தின் வசூலைக் கடந்து உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் "அவதார் 2" ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2009ல் வெளிவந்த "அவதார்" படத்தின் முதல் பாகம் வசூலித்த 2.9 பில்லியன் வசூலை "அவதார் 2" பெற முடியாது என்றாலும் 2 பில்லியன் வசூலை நிச்சயம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் 57 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 463 கோடி ரூபாய். இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படங்களில் "அவதார் 2" படம் முதலிடத்தில் உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!