
வாரிசு - தெலுங்கில் வெற்றிப் படமா ?
நான்கு நாட்களில் இப்படம் தெலுங்கில் சுமார் 20 கோடியை வசூலித்துள்ளதாம். அதில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 11 கோடி கிடைத்துள்ளது என்கிறார்கள். படத்தின் தெலுங்கு உரிமை 14 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதால் படம் லாபத்தைப் பெற இன்னும் 3 கோடி வசூலித்தாக வேண்டும். அதே சமயம் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இப்படம் லாபத்தைத் துவக்கிவிட்டது என்று சொல்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக "வாரிசு" படம் 210 கோடி வசூலித்துள்ளது என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!