
கிடா மீசை - முரட்டு லுக்கில் அருள்நிதி
ஜூன் 06, 2022
Advertisement
டைரி, தேஜாவு, டி-பிளாக் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீஸாக உள்ளன. இதையடுத்து டிமான்டி காலனி 2 படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை இயக்கி கவுதம் ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் அருள்நிதி. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கிடா மீசையுடன் முரட்டு னாக்கில் பக்கா கிராமத்து இளைஞராக உள்ளார் அருள்நிதி. இவரது தோற்றத்தை பார்க்கும் போது பக்கா கிராமத்து கதையில் இந்த படம் உருவாகும் என தெரிகிறது. இமான் இசையமைக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!