
800 மில்லியன் பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து
ஜூன் 17, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து தமிழக முதல்வர் ஆகிவிட்டார் விஜய். சிறு குழந்தைகளையும் அவர் கவர்ந்ததற்கு முக்கியமான காரணம் அவரது நடனம். அவரது ஆரம்ப காலப் படங்களிலிருந்து கடைசியாக வெளிவந்த படம் வரை அவரது படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும். நடனம் உள்ள பாடல்களில் அவரது நடனம் அசத்தலாக இருக்கும்.
அப்படி அமைந்த ஒரு பாடல்தான் "அரபிக் குத்து" பாடல். 2022ம் ஆண்டு வெளிவந்த "பீஸ்ட்" படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் தற்போது 800 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சுமார் 4 வருடங்களில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
விஜய் படப் பாடல்களில் யு டியூப் தளத்தில் அதிகப் பார்வைகளைக் குவித்துள்ள பாடலாக இது இருக்கிறது அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இந்தப் பாடலை அனிருத், ஜோனிதா காந்தி பாடியுள்ளனர். விஜய், பூஜா ஹெக்டே இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
யு டியுப் தளத்தில் தமிழ் சினிமா பாடல்களில் அதிகமான பார்வைகளைப் பெற்ற பாடலாக "மாரி 2" படத்தில் இடம் பெற்ற "ரவுடி பேபி" பாடல் உள்ளது. தற்போது வரையில் 1745 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!