காதலை உறுதி செய்தார் அம்மு அபிராமி
ஜூன் 11, 2024
Advertisement
விஜய் நடிப்பில் வெளியான "பைரவா" படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. அதன்பிறகு "தீரன் அதிகாரம் ஒன்று", "ராட்சசன்" படத்தில் நடித்தார். "அசுரன்" படத்தில் தனுஷின் முன்னாள் காதலியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் நடித்திருந்தார். இவை தவிர துப்பாக்கி முனை, தம்பி, காரி, பாபா பிளாக்ஷிப், கண்ணகி, ஹாட் ஸ்பாட் படங்களில் நடித்தார்.
இதுதவிர சின்னத்திரையில் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் மணியை காதலிப்பதாக தவல்கள் வெளியானது. ஆனால் இதனை இருவரும் மறுக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் பார்த்திபன் மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி காதலை உறுதி செய்துள்ளார் அம்மு அபிராமி. மணியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு “பிறந்ததற்கு நன்றி, வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி” பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!