
காளி வெங்கட் ஜோடியான பாலா பட ஹீரோயின்
படம் குறித்து இயக்குனர் ஜெகதீசன் சுப்பு கூறியதாவது: "பக்ரீத்" படத்தில் ஒரு குடும்பம், ஒரு ஒட்டகம் சுற்றி நடக்கும் கதையை சொன்னேன். இதில் ஒரு குடும்பம், ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் கதையை சொல்கிறேன். விலங்குகள் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. அதனால்தான் விலங்கை மையப்படுத்தி உணர்வுபூர்வமான கதையை சொல்கிறேன்.
காளி வெங்கட், ரோஷிணி தம்பதியின் மகனாக விஷ்வ ராஜ் நடித்திருக்கிறார். மகனுக்கு காது ஆபேரஷன் செய்வதற்காக அல்லல்படும் அம்மாவாக ரோஷிணி நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைக்கிறது. அது பெண் நாய்க்குட்டி என்பதால் அதற்கு "தோனிமா" என காளி வெங்கட் பெயர் வைக்கிறார். விலங்கு மீதான பாசத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் சொல்லும் படமாக இது இருக்கும் என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!