அமரன் படம் : ஜான்வி உருக்கம்
ஜன 01, 2025
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து அக்., 31ல் வெளியான ‛அமரன்" படம் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வந்தது. தமிழ் சினிமாவில் 2024ல் அதிக லாபம் தந்த படமாக அமரன் உள்ளது. பிறமொழிகளிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அமரன் படத்தை இருநாட்களுக்குமுன் பார்த்த நடிகை ஜான்வி கபூர் அதுபற்றி குறிப்பிடும்போது, ‛‛இந்த படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் ஆச்சர்யமான, உருக்கமான படம். 2024 ஐ முடிக்க ஒரு சிறப்பான படம். மனதை தொட்ட, மனதை கனக்க செய்த ஒரு படத்தை பார்த்தேன்"" என உருகி பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…