
பொங்கல் ரேஸில் இணைந்த படை தலைவன்
மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பாச உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. அதோடு விஜயகாந்தை ஏஐ மூலம் இந்த படத்தில் காண்பிக்க உள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இருப்பினும் பொங்கல் வெளியீட்டில் அஜித்தின் விடாமுயற்சி, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் ரிலீஸை அறிவிக்காமல் இருந்தனர். இப்போது விடாமுயற்சி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துவிட்டனர். இதனால் படை தலைவன் படம் பொங்கல் வெளியீடு என தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!