பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுத்த அக்கினேனி குடும்பம்
ஜன 24, 2023
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், என்டி ராமராவ் ஆகியோர் பல சாதனைகளைப் புரிந்தவர்கள். அவர்களது காலம்தான் தெலுங்கு சினிமாவின் பொற்காலமாக இருந்தது. அவர்களது வாரிசுகள் இப்போதும் தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
என்டி ராமராவ் மகனான பாலகிருஷ்ணா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் "வீரசிம்ஹா ரெட்டி". அந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா பேசிய போது, “அக்னினேனி, தொக்கினேனி…..அஅ ரங்காராவ், ஈஈ ரங்கா ராவ்” என அக்கினேனி நாகேஸ்வரராவ் பற்றியும், குணச்சித்திர நடிகரான எஸ்வி ரங்காராவ் பற்றியும் கிண்டலான முறையில் பேசினார்.
அது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சை போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் நாகேஸ்வரராவின் பேரன்களும், நாகார்ஜுனாவின் மகன்களாக நடிகர்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோரும் இருவரும் தனித்தனியாக ஒரே விதமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “நந்தமூரி தாரக ராமராவ் காரு (என்டிஆர்), அக்கினேனி நாகேஸ்வரராவ் காரு, மற்றும் எஸ்வி ரங்கா ராவ் காரு ஆகியோர் தெலுங்கு சினிமாவின் தூண்களாகவும், பெருமையாகவும் இருந்து பங்களித்தவர்கள். அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பாலகிருஷ்ணாவுக்கும், நாகார்ஜுனாவுக்கும் எப்போதுமே போட்டி உண்டு. இருவரும் நட்பாகவும் பழகிக் கொள்ள மாட்டார்கள் என்பது தெலுங்குத் திரையுலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால்தான், அவரது மகன்களான நாக சைதன்யா, அகில் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
அன்றைய சக்சஸ் மீட்டின் போது பாலகிருஷ்ணா பேச்சில் நிறைய "தடுமாற்றம்" இருந்ததாக நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கமெண்ட்டாக உள்ளது. அவரது பேச்சிற்கு அக்கினேனி குடும்பத்திலிருந்து பதிலடி வந்துள்ளதால் இந்த விவகாரம் இத்துடன் அடங்குமா மீண்டும் பாலகிருஷ்ணா தரப்பிலிருந்து வேறு அறிக்கை வருமா என்பது இனிமேல்தான் தெரியும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…