மாமா என்பதை மறந்து, மீண்டும் சேர்த்து நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா
செப் 21, 2021
Advertisement
தெலுங்குத் திரையுலகின் மிக சீனியர் ஹீரோவான அக்கினேனி நாகேஸ்வரராவின் 99வது பிறந்தநாளை நேற்று தெலுங்கு திரையுலகத்தினர் கொண்டாடினர். அவரது மகனான நடிகர் நாகார்ஜுனா, அவரது அப்பா ஸ்டைலில் பஞ்சகச்ச வேட்டி அணிந்து அப்பா செயின், மோதிரம், வாட்ச் ஆகியவற்றை அணிந்து அப்பாவை நினைவு கூறும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
நாகார்ஜுனா காலையில் பதிவிட்ட வீடியோவிற்கு மாலையில் வாழ்த்து தெரிவித்திருந்தார் மருமகள் சமந்தா. “நாகார்ஜுனா மாமா, இது மிகவும் அழகாக உள்ளது,” என்று "#ANRLIvesOn என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.
மேலே சொன்ன டுவீட் சமந்தா இரண்டாவதாகப் பதிவு செய்தது. முதலில் "மாமா" என்ற வார்த்தையை சேர்க்க மறந்து அவர் டுவீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர்கள் "மாமா" வார்த்தை எங்கே எனக் கேட்டதும், அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டு, பின்பு "மாமா" என்ற வார்த்தையைச் சேர்த்து டுவீட் செய்தார்.
இதையும் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்து சர்ச்சையில் சேர்த்து பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!