5 வருடங்களுக்கு பிறகு தமிழில் வரும் வேதிகா படம்
ஜூன் 25, 2024
Advertisement
அர்ஜூன் நடித்து, இயக்கிய "மதராஸி" படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வேதிகா. அதன்பிறகு தமிழில் சக்கரகட்டி, காளை, முனி, மலை மலை, பரதேசி, உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான "காஞ்சனா 3" படத்தில் நடித்தார். தற்போது 5 வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள "பேட்ட ராப்" படம் விரைவில் திரைக்கு வருகிறது.
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணி நடைபெற்று வருகிறது. இசை, நடனம், ஆக்ஷன் கலந்த படமாக தயாராகி வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…