10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி
ஜன 16, 2025
Advertisement
கடந்த 2015ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் "ஆம்பள". இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதுவரை ஹிப்ஹாப் தமிழா என்கிற பெயரில் ஆல்பம் பாடல்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடல்களை பாடினார் ஆதி. தற்போது இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வருகிறார்.
தற்போது தான் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாக 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் விஷால் மற்றும் சுந்தர்.சி உடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, ‛‛10 வருடங்களுக்கு முன்பு இது நடந்தது #ஆம்பள"" என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!