
‛அன்பே ஆருயிரே நிலாவுக்கு மார்ச் மாதம் திருமணம்
பிப் 02, 2024
Advertisement
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தில் அறிமுகமானவர் நிலா எனும் மீரா சோப்ரா. நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், அதன்பிறகு ஜாம்பவான், மருதமலை, காளை, இசை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்த நிலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெப் சீரியல்களில் நடித்து வந்தவர் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். தனது திருமணம் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெறுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். என்றாலும் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தற்போது நடிகை நிலாவுக்கு 40 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!