ஒரு வார சிறப்புக் காட்சி, முதலில் அனுபவிக்கும் ஜனநாயகன்
ஜூலை 22, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை அதிகாலை காட்சிகள் 4 மணிக்கு நடைபெற்று வந்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் நடித்து வெளிவந்த படங்களுக்கு அப்படியான காட்சிகளுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால், அஜித் நடித்து 2023 பொங்கலுக்கு வெளிவந்த "துணிவு" படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி சென்னை, ரோகிணி தியேட்டரில் நடந்தது. அப்போது படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே விழுந்ததில் மரணம் அடைந்தார். அதன் பின் அப்போதைய திமுக அரசு அதிகாலை காட்சிகளுக்கும், காலை 6 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்குவதை நிறுத்தியது.
காலை 9 மணிக்கு மட்டும், அதுவும் படம் வெளியான அன்று மட்டுமே, ஒரே ஒரு சிறப்புக் காட்சி நடத்த கடந்த மூன்று வருடங்களாக அனுமதி வழங்கியது. அதைப் படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளித்து பெற்று வந்தார்கள். அதனால், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அதிகாலை காட்சியைப் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள்.
இந்நிலையில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதில் அதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். நேரத்தை அவர் மாற்றவில்லை, அதே 9 மணிதான். ஆனால், ஒரு நாள் மட்டுமே வழங்கப்பட்ட சிறப்புக் காட்சிக்கான அனுமதி ஒரு வாரம் நடத்திக் கொள்ளும்படியும், அதை நிரந்தர ஆணையாகவும் வெளியிட்டார்கள்.
இந்த ஆணை மே மாதம் 25ம் தேதி வெளியானது. அதன்பின் எந்த ஒரு முன்னிணி நடிகரின் படங்களும் வெளியாகவில்லை. வெளிவந்த மற்ற நடிகர்களின் படங்களும் அந்த ஆணைப்படி ஒரு வாரம் சிறப்புக் காட்சிகளை நடத்தவில்லை.
ஆணையை போட்ட முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான "ஜனநாயகன்" படம்தான் அந்த ஆணைப்படி நடிக்க உள்ள முதல் படமாக இருக்கப் போகிறது.
நாளை முதல் அடுத்த வாரம் புதன் கிழமை, ஜுலை 29ம் தேதி வரை காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சிகள் பல தியேட்டர்களில் நடக்க உள்ளது. அதற்கான முன்பதிவுகளும் நடந்து வருகின்றன. இதனால், படத்தின் வசூல் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!