
டாக்சிக் படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நயன்தாரா
இதுவரை, படக்குழுவினர் இரண்டு பாடல்களையும், இரண்டு டிரைலர்களையும் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கியாரா அத்வானி மற்றும் தாரா சுடாரியா ஆகிய இருவருமே யஷின் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் நயன்தாராவின் கதாபாத்திரம் இன்னும் ரகசியமாகவே உள்ளது.
சமீபத்தில் வெளியான பாடல் இந்த ஊகங்களை மேலும் அதிகரித்துள்ளது. அதில் ஒரு காட்சியில், நயன்தாரா யஷின் அருகில் நின்றுகொண்டு, அவரது கையிலிருக்கும் சிகரெட்டை சாதாரணமாக வாங்கிப் புகை பிடிக்கிறார். முன்னதாக வெளியான டிரைலர்களிலும் அவர் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது போன்ற சீன்கள் இருந்ததால், அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. இருப்பினும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் கங்கா என்பதைத் தவிர வேறு எந்த விவரங்களையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.
டாக்சிக் படத்திற்காக நயன்தாரா ரூ.10 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளதாகவும், இப்படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை அவர்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!