இதயம் முரளி படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா
ஜூலை 22, 2026
Advertisement
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் படம் இதயம் முரளி. இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்திற்காக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் முதலில் எஸ்.ஜே. சூர்யாவைத்தான் அணுகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் கூறுகையில், இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் நடித்த கதாபாத்திரத்திற்கு எஸ்.ஜே. சூர்யாவைதான் முதலில் தேர்வு செய்திருந்தோம். ஆனால், தான் கெஸ்ட் ரோலில் நடிக்க விரும்பவில்லை என்று அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் பஹத் பாசிலை அணுகி, இதயம் முரளி படத்தின் பிசினஸ் கட் காட்சிகளைக் காட்டினேன். அவரும் மறுத்து விடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நேரம் இருந்ததால், நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது காட்சிகளைப் படமாக்கினோம் என்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.
இப்படத்தில் காயடு லோஹர், பிரீதி முகுந்தன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நட்டி நடராஜன், தமன்.எஸ், ஜோனிதா காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!