
நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார்
"ஆத்தா உன் கோவிலிலே" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி சினிமாவில் நடித்து வருவதோடு, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதில் சில சர்ச்சைகளில் சிக்கி சிறையும் சென்றார்.
இந்நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி பாஜவில் இணைந்தார். அவருடன் பிக்பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும் பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!