பிளாஷ்பேக் : ராஜ்கிரண் ஹீரோவாக மாறிய தருணம்
செப் 12, 2026
Advertisement
திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் அப்போது படங்களையும் தயாரித்து வந்தார். குறிப்பாக ராமராஜன் படங்களை தயாரித்தார். ராமராஜனிடம் கால்ஷீட் வாங்கி வைத்துக் கொண்டு கதை கேட்டு வந்தார். அப்போது விசுவிடம் உதவியாளராக இருந்த கஸ்தூரி ராஜா அவரை சந்தித்து கதை சொன்னார். கதையை கேட்ட ராஜ்கிரண் “இந்த கதை அவருக்கு செட் ஆகாது. விஜயகாந்த் அல்லது சத்யராஜ் கால்ஷீட் வாங்கி வாருங்கள் நான் இந்த படத்தை தயாரிக்கிறேன்” என்றார்.
விஜயகாந்தை சந்தித்து கதை சொன்னார். “மனைவி செத்ததுக்காக நான் அழுது கொண்டு ரோட்டில் அலைந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்று கூறிவிட்டார். இதை ராஜ்கிரணிடம் சொன்ன கஸ்தூரி ராஜா “பேசாமல் நீங்களே நடித்து விடுங்கள்” என்றார். கதை வலுவாக இருப்பதால் யார் நடித்தாலும் மக்கள் ஏற்பார்கள் என்று ராஜ்கிரணே நடிக்க முடிவெடுத்தார்.
கதை நாயகியாக அப்போது பிசியாக இருந்த ரேகாவை நடிக்க கேட்டார்கள். ஆனால் "என்னிடம் தேதி இல்லை" என்று அவர் மறுத்து விட்டார். ஆனால் உண்மையில் ராஜ்கிரண் முரட்டுத்தனமான ஆளாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் நடிக்கும்போது. அவருடன் நடித்தால் இமேஜ் போய்விடும் என்பதால் நடிக்க மறுத்ததாக கூறப்படுவதுண்டு. பின்னர் அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த மீனா நடிக்க வைக்கப்பட்டார்.
தனது அலுவலத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்து வந்த வடிவேலுவை படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிக்க வைத்தார். அந்த காட்சியும், பாடலும் ஹிட்டானதால் அவரும் பெரிய நடிகர் ஆனார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!