
பூரி ஜெகன்நாதர் கோயிலில் கிடைத்த சமுத்திரக்கனி படத்தலைப்பு
இடையில் ஒரு விளம்பரம் வந்தது. அது ஒரு விழிப்புணர்வு விளம்பரம். அதில் நன்றாக உடையணிந்து ஸ்டைலாக ஒரு நடிகர், இயக்குநர் வந்தார். அவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்தான் சமுத்திரக்கனி. அப்போது அவரை வைத்து ஏன் ஒரு கதை செய்யக்கூடாது என்று நினைத்தேன். இந்தக்கதை தோன்றியது. அதே நாளில் பூரி ஜெகநாதர் கோயிலில் எனக்கு இரண்டு விஷயங்கள் கிடைத்தன. ஒன்று : படத்தின் தலைப்பு கஸ்தூரி என்பது, அந்தப் பெயரில் திரைப்படமாக எடுப்பது, இன்னொன்று : ஹாரர் பேய்ப் படமாக எடுப்பது. முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்த "கஸ்தூரி வீடு".
இந்த படத்திற்கு சமுத்திரகனி வந்த பிறகு , பெரியபடமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்குப் பயமாக, தயக்கமாக இருந்ததது. ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார்"" என்றார்.
விழாவில் சமுத்திரக்கனி பேசுகையில், ‛‛ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுப்புது மனிதர்களோடு பயணம் செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்று நினைக்கிறவன் நான். புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புதுபுது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன். இந்த மாதிரிப் படங்களுக்குத் தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும். அப்படி ஒரு ஆசை இருக்கும். நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரைத் தேடுகிறேனோ, அவர் ஒரு படம் எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார். இப்படி மாறி மாறித் தேடிக் கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.
நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும். அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம் செய்வோம்; 100 சதவீதம் செய்வோம். உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். என் குருநாதர் பாலசந்தர் சொல்வார் "நீ உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்"னு சொல்லுவாரு .அதற்கு ஒரு உதாரணம்தான் "மண்டாடி" சூரியோட திரைப்படம்.அவருடைய உழைப்புதான்,"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!