
13 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது மூடர்கூடம் 2: பர்ஸ்ட்லுக் வெளியீடு
2013ம் ஆண்டு நவீன் என்பவர் இயக்கி, தயாரித்து, நடித்த படம் "மூடர் கூடம்". சென்ட்ராயன், ஓவியா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் சமுத்திரகனி நடித்த "கொளஞ்சி" படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன் தயாரித்தும் இருந்தார். எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
பின்னர், விஜய் ஆண்டனியை வைத்து "அக்னிச் சிறகுகள்" எனும் படத்தை இயக்கி இருந்தார். பல ஆண்டுகளாக இப்படம் வெளியிட முடியாமல் கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு "மூடர் கூடம் படத்தின் 2வது பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராண்டல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சென்ட்ராயன், ஓவியா, ராஜ மாணிக்கம், சூரஜ் நல்லுசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் "மிஷன் பாசிபிள்" என்ற பெயரில் ரிலீசாகிறது. படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5:55க்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!