
சூரி படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூரி நாயகனாக நடிக்கும் 7வது படம் என்பதால் "சூரி 7" என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குனர் ரவிகுமார் கூறும்போது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதாநாயகனாக சூரி தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார். அவரது திறமை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!