
பிளாஷ்பேக்: இரட்டை எடிட்டர்கள்
பி.லெனின் தமிழ் சினிமாவின் முக்கிய எடிட்டர். எளிமையாக வாழும் இவர் பிரமாண்ட படங்களுக்கும் எடிட்டராக பணியாற்றி உள்ளார். சிறு பட்ஜெட் படங்களுக்கும் பணியாற்றி உள்ளார். பழம்பெரும் இயக்குநரான பீம்சிங்கின் மகன் இவர். "உதிரிபூக்கள்" படத்தின் மூலம் எடிட்டரான இவர் பின்னர் தனது உதவியாளராக பணியாற்றிய வி.டி.விஜயனுடன் இரட்டை எடிட்டராக 100க்கும் மேற்பட்ட படத்தில் பணியாற்றி உள்ளார்.
நாயகன், அஞ்சலி, சூரியன், ஆவாரம்பூ, ஜென்டில்மேன், காதலன், இந்தியன், மோகமுள், வேலாயுதம் போன்றவை இவர்கள் இணைந்து பணியாற்றிய முக்கிய படங்கள். "காதலன்" படத்திற்காக இருவரும் இணைந்து தேசிய விருது பெற்றனர். பல வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி பிரிந்தது. பி.லெனின் ஆவண படங்கள், சுயாதீன படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார். வி.டி.விஜயன் மலையாள படங்களில் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டினார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…