சிம்புதேவன் இயக்கும் நவோரியா : இதற்கு என்ன அர்த்தம்
நவ 24, 2026
அ நிறம் | அளவு
Advertisement
இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்புகோட்டை முரட்டு சிங்கம், அறை எண் 305ல் கடவுள், புலி உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவனின் அடுத்த படம் நவோரியா. இதில் விமல், ஷீத்தல், தம்பி ராமையா, பாலசரவணன் நடிக்க, ஆரி வில்லனாக நடிக்கிறார். நவோரியா என்பது ஒரு இடத்தின் பெயராம். ஒரு மலையை பின்னணியாக கொண்டு பேண்டஸி கலந்த காமெடி படமாக இந்த கதை உருவாகிறதாம். தென்காசி பக்கம் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜாலியாக ஊருக்கு போன இடத்தில் ஒரு கேமில் பலர் சிக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பது கதையாம். சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்த போட் சரியாக போகவில்லை. அதனால், இந்த படத்தை அவர் நம்பியிருக்கிறார். விமலுக்கு கடந்த சில ஆண்டுகளாக எந்த படமும் ஓடவில்லை. அவரும் டிசம்பர் 18ம் தேதி வரும் இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…