படப்பிடிப்பில் கல்யாணி காயம்
ஜூன் 21, 2023
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி ஆகியோரின் மகள் கல்யாணி. மலையாள படத்தில் அறிமுகமான கல்யாணி தமிழில் "ஹீரோ" படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். சிம்பு ஜோடியாக மாநாடு படத்திலும் நடித் திருக்கிறார். தற்போது ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகி வரும் "ஆண்டனி" என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கடந்த மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்துக்காக சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!