
குழந்தைகள் என்னை கொண்டாடுகிறார்கள்: மமிதா மகிழ்ச்சி
சூர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்". வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இதையொட்டி படத்தில் பணியாற்றிவர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசியதாவது: படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததற்கும், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவிய ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.
இந்த படத்தை இதுவரை பார்க்காதவர்கள் தயவுசெய்து தியேட்டர்ல போய் பாருங்க. ஏன்னா, தியேட்டரை விட்டு வெளிய வரும்போது மனசுக்குள்ள ஒரு நிறைவு கிடைக்கும். படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க, அதுல மறக்க முடியாத நினைவுகள் நிறையவே இருக்கு. ஆனா, என்னை ரொம்பவே நெகிழ வச்ச ஒரு விஷயம் இருக்கு.
சில வீடியோக்கள் நான் பார்த்தேன். அதுல சின்னக் குழந்தைகள் எல்லாம் திரையரங்குல "பட்டாம்பூச்சி" பாட்டு வரும்போதும், என்னுடைய நகைச்சுவைக் காட்சிகளின்போதும் சிரிச்சு மகிழ்ந்து, தியேட்டர் சீட்ல இருந்து எந்திரிச்சு கொண்டாடினாங்க.
அவங்களைப் பார்த்ததும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்தான் ஞாபகம் வந்தது. நான் சின்ன வயசில இருக்கும்போது, நான் தியேட்டருக்குப் போய் ஒரு நல்ல படத்தையோ அல்லது எனக்குப் பிடிச்ச ஒரு கதாபாத்திரத்தையோ பார்த்து எப்படி கொண்டாடினேனோ, அதே மாதிரி இப்போ சின்னக் குழந்தைகள் என் படத்தைக் கொண்டாடுறதைப் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால சொல்லி விவரிக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!