நடிகை ராதிகாவிடம் அடி வாங்கி இருக்கிறேன் : ஜி.வி.பிரகாஷ்
ஆக 19, 2026
Advertisement
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடித்துள்ள ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் நான்கு நாட்களில் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளது. சென்னையில் நடந்த இந்தப்பட நன்றி அறிவிப்பு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசியது...
இந்த பட இயக்குனருடன் முதலில் "வாத்தி" படத்துலதான் சேர்ந்தேன். அது பெரிய ஹிட் ஆச்சு. அடுத்து லக்கி பாஸ்கர் சேர்ந்து பண்ணினேன், அதுவும் பெரிய ஹிட் ஆச்சு. இப்ப "விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்" மூணாவது படம். மூன்றாவது வெற்றி, தேங்க்ஸ் வெங்கி. ‛வாத்தி" படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைச்சது. அந்த படத்துக்குபின் தெலுங்குல எனக்கு நிறைய படம் வர ஆரம்பிச்சுது. அதுக்கு வெங்கிதான் காரணம். வேற ஒரு தெலுங்கு படத்துக்காக ஐதராபாத் போயிருந்தேன். அங்க "விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்" பத்திதான் பேசிட்டு இருந்தாங்க. எனக்கு பெருமையா இருந்துச்சு.
போற இடத்துல எல்லாம் இந்த படத்தைப் பத்தி வந்து பேசுறாங்க அப்படின்னும்போது அது தான் உண்மையான வெற்றி என நினைச்சேன். ஐதராபாத் ஆகட்டும், ஆந்திரா, கேரளா, ஓவர்சீஸ்ல படம் வசூலில் ரொம்ப நல்லா பண்ணியிருக்கிறது.
ராதிகா உடன் சேர்ந்து நடிக்கும்போது அடி வாங்கியதாக சொன்னாங்க, ஸ்பாட்ல நானும் ஒருவாட்டி அடி வாங்கிருக்கேன். சூர்யா, ராதிகாவிற்கு தொடர் வெற்றி கிடைக்குது. இந்த படம் ரீ ரெக்கார்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன். ராதிகா நடித்த காட்சிகளுக்கான பணி நடந்தது. நைட் 2 மணிக்கு செகண்ட் ஹாப் ரீ ரெக்கார்டிங்காக பார்க்கிறேன். அழுதுகிட்டே இருக்கேன். எதுக்கு அழுகிறேன் என்று எனக்கே தெரியல. அப்புறம் மெசேஜ் பண்ணி வாழ்த்துகள் சொன்னேன். அவுங்க நடித்த இறப்பு சீனுக்கு அப்புறம் எனக்கு ஒரு மாதிரி எமோஷனல் ஆயிடுச்சு. இந்த படத்துக்கு பாசிட்டிவிட்டி விமர்சனம் வருது. அது நல்ல விஷயம்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!