
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : அமெரிக்காவில் 1.7 மில்லியன் வசூல்
வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்". இப்படம் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது அமெரிக்காவில் இப்படம் 1.7 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாக அமெரிக்க வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் இதுவரையில் வெளிவந்த படங்களை விட இந்தப் படம் அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதிக்குள் 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவில் ஆன்லைன் இணையதளங்கள் மூலம் மட்டும் 3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுளளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!