
அஞ்சலியின் 50வது படம்
மே 26, 2023
Advertisement
ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. சினிமாவிற்கு அவர் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்போது தனது 50வது படத்தில் கமிட்டாகி இருக்கிறார் அஞ்சலி. இந்த படத்தை கிரீன் அமியூஸ்மென்ட் மற்றும் டி3 புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏப்ரல் 27 ஆம் தேதியான நாளை மாலை இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!