நடிகர் கங்கா காலமானார்
நவ 11, 2023
Advertisement
1983ம் ஆண்டில் டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த "உயிருள்ள வரை உஷா" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கங்கா (63). நளினி ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி, லட்சுமி வந்தாச்சு, அம்மா பிள்ளை, தங்கமான ராசா, முருகனே துணை போன்ற பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். சில தொடர்களை இயக்கியும் உள்ளார்.
உடல் நலக்குறைவு காரமாக சினிமாவை விட்டு விலகிய கங்கா, சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள அவரது அண்ணன் மகன் மயில்வாகனன் வீட்டில் வசித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாத கங்காவை மயில்வாகனன்தான் கவனித்து வந்தார். 63 வயதான கங்கா நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான சிதம்பரம் அருகேயுள்ள பரதூரில் இன்று இறுதி சடங்கு நடக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…