
சிம்பு புதிய படங்களில் நடிக்க தடை இல்லை : நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு விசாரணையில் ஒப்பந்தத்தில் ஒரு கோடி முன்பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்பு தரப்பில் ஒரு கோடி செலுத்திய ரசீது ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய, மூத்த வக்கீல் என்.எல்.ராஜா மத்தியஸ்தராக நியமிக்கப்படுகிறார். சிம்பு கொடுத்துள்ள 1 கோடிக்கான உத்தரவாதம் 2 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். அதற்குள் இருதரப்பும் பேசி முடிவுக்கு வரவேண்டும். "கொரோனா குமார்" படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை ஏற்க முடியாது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று சிம்புவுக்கு தடை விதித்தால், அது அவரது தொழிலுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதாகிவிடும். மேலும், இந்த பிரச்சினையை சட்டப்படி இரு தரப்பினரும் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!