
‛நாளை நமதே, நீயா படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சந்திர மோகன் காலமானார்
தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்தார் சந்திரமோகன். ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது சகோதரராக நடித்தார். தொடர்ந்து கமலின் நீயா படத்தில் இச்சாதாரியாக நடித்த ஸ்ரீபிரியாவின் காதலனாக நடித்தார். பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் குணச்சித்ர வேடத்தில் நடித்து வந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று(நவ., 11) காலை 9:45 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை அன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!