ஆபரேஷன் ஓம் செம்மரக் கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் : ‛ஓம் டிரைலர் எப்படி இருக்கு...?
நவ 14, 2026
Advertisement
‛அமரன்" படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛ஓம்". தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
நவ., 20ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு டிரைலர் வெளியிடுவதாக அறிவித்து சில மணிநேரங்கள் தாமத்திற்கு பின் 11 மணிக்கு மேல் டிரைலரை வெளியிட்டனர். 3:03 ஓடும் இந்த டிரைலர் செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாகி உள்ளது.
ஆந்திரா மற்றும் தமிழக வனப்பகுதிகளில் நடைபெறும் செம்மரக் கடத்தலையும், அதனை தடுக்கப் போராடும் காவல்துறையின் "ஆபரேஷன் ஓம் (மோல்)" நடவடிக்கையையும் தான் படத்தின் கதைக்களம்.
செம்மரக் கடத்தல் குழுவின் தலைவராக மம்முட்டி மிரட்டலாக வருகிறார். தமிழக அரசால் ஒருங்கிணைப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியாக வரும் தனுஷ் உளவாளியாக கடத்தல் கும்பலுக்குள் நுழைந்து ஒருக்கட்டத்தில் அவரே போலீஸை எதிர்ப்பது மாதிரியான காட்சிகள் டிரைலரில் இடம்பெற்று இருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. "நித்யா ரெட்டி" என்ற போலீஸ் அதிகாரியாக "ஆபரேஷன் மோல்" நடவடிக்கையை வழி நடத்துகிறார். இதுவரை பார்த்திராத மிடுக்கான காவல்துறை அதிகாரி தோற்றத்தில் அவர் கவனம் ஈர்க்கிறார்.
சாய் அபயங்கரின் பின்னணி இசையும் டிரைலருக்கு வலு சேர்த்துள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கடத்தல் பின்னணியில் ஒரு ஸ்பை ஆக் ஷன் திரில்லர் படமாக ஓம் இருக்கும் என தெரிகிறது. டிரைலர் வெளியான சுமார் 11 மணிநேரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் யு டியூப் தளத்தில் கிடைத்துள்ளன. அதோடு டிரெண்டிங்கிலும் வலம் வருகிறது.
இந்த படத்தின் போஸ்டர்களில் ‛ஓம் சாப்டர் 1" என படக்குழுவினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதால் ஓம் இரண்டாம் பாகமும் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படியோ ‛ஓம்" படம் என்ன மாதிரியான வரவேற்பை பெற போகிறது என்பது அடுத்தவாரம் நவ., 20க்கு பின் தெரிந்துவிடும்.

Tags

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…