7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!
மார் 11, 2026
Advertisement
கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் "7ஜி ரெயின்போ காலனி". இந்தப்படம் தெலுங்கிலும் ‛7ஜி பிருந்தாவன் காலனி" என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நகராமல் அப்படியே நின்றது. இதற்கு காரணமாக அனஸ்வரா ராஜன் கால்ஷீட் இல்லை என கூறப்பட்டது. தற்போது மீதமுள்ள படப்பிடிப்பை நேற்று தொடங்கியுள்ளனர். இந்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும்போது பாடல் காட்சி உடன் தொடங்கியுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!