
3 பிஎச்கே பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடுத்தர குடும்பத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் "3பிஎச்கே". இன்றைக்கு நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை மையப்படுத்தி பெரிய வியாபாரம் நடக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை தான் இந்த "3 பிஎச்கே".
ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படம் சித்தார்த்தின் 40வது படமாகும். இதில் அவருடன் இணைந்து சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் நடித்துள்ளனர். அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மூலம் ரசிகர்களுக்கு ஆர்வம் உருவானது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 4ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!