
சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா?
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!