
பழம்பெரும் டி.வி.நடிகை கவிதா சவுத்ரி காலமானார்
வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி அமிர்தசரசில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கவிதா சவுத்ரி இறந்தார். அவருக்கு வயது 67. கவிதா சவுத்ரியின் மரணத்துக்கு பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!