
டங்கல் பட நடிகை 19 வயதில் திடீர் மரணம்
அப்படத்திற்குப் பிறகு சுஹானி நடிப்பிலிருந்து விலகி தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவரது அகால மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்படத்தைத் தயாரித்த ஆமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அவர்களது இரங்கலைத் தெரிவித்துள்ளது. “எங்கள் சுஹானி மறைவு கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். அவரது தாயார் பூஜாஜி அவர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல். திறமையான இளம் பெண், அற்புதமான அணி வீரர், சுஹானி இல்லாமல் "டங்கல்" முழுமை அடைந்திருக்க முடியாது. சுஹானி எங்களது மனதில் நீங்கள் எப்போதும் நட்சத்திரமாகவே இருப்பீர்கள். நிம்மதியாக ஓய்வெடுங்கள்,” என குறிப்பிட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!