
ஹிந்தியில் தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்கும் டாக்சிக்
ஆக 31, 2026
Advertisement
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அன்று வெளியான படம் "டாக்சிக்". இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிக பிரமாண்டமான வரவேற்புடன் கணக்கைத் தொடங்கியது. என்றாலும் எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக அந்த தொடக்கத்திற்குப் பிறகு இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் 230 கோடி வசூலித்துள்ளது.
பாலிவுட்டில் "டாக்சிக்" ஹிந்தி பதிப்பு முதல் நாளில் 55 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. ஆனால், அதற்கு பிறகு மோசமான விமர்சனங்கள் காரணமாக வசூல் சடசடவெனச் சரியத் தொடங்கியது. 2வது நாளில் 25 கோடியும், ரக்ஷா பந்தன் பண்டிகை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையன்று 20 கோடியும் மட்டுமே வசூலித்தது. சனிக்கிழமையன்று படத்தின் வசூல் மேலும் பெருமளவு சரிந்து, சுமார் 15 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. அதனால் டாக்சிக் படத்தின் ஹிந்தி வசூல் என்பது ஞாயிற்றுக்கிழமையான நேற்றோடு முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!