
திரிஷ்யம் -3 அஜய் தேவ்கனின் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமையுமா?
ஆக 31, 2026
Advertisement
ஹிந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "திரிஷ்யம்-3". அக்டோபர் 2, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த "திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்" படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.
திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அஜய் தேவ்கன் நடித்திருந்தார். அதற்கு ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், விஜய் சல்கோன்கரின் கதை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, அஜய் தேவ்கனின் திரையுலக வாழ்க்கையிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக "சிங்கம் அகெய்ன்" உள்ளது. அந்த படம் முதல் நாளில் 43.70 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் அப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து, திரிஷ்யம் 3 புதிய சாதனை படைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாலிவுட்டில் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!