
சன்னி லியோனை பின்தொடரும் 50 மில்லியன் பேர்
ஜன 21, 2022
Advertisement
தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடல் மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது ஜீரோ, ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் சோசியல் மீடியாவில் சன்னி லியோனை ஏராளமான பாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது அவர் 50 மில்லியனை கடந்து சென்று கொண்டிருக்கிறார் . அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஸ்ரத்தா கபூர் போன்ற 50 மில்லியன் பார்வைகளை கொண்ட பிரபல நடிகைகளின் பட்டியலில் தற்போது சன்னி லியோனும் இணைந்திருக்கிறார். இப்படி தன்னை சோசியல் மீடியாவில் 50 மில்லியன் பேர் பாலோ செய்து வரும் நிலையில் அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சன்னி லியோன் ஆடிப் பாடி பார்ட்டி பண்ணலாமா? என்றும் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!