பண்டிட் குயின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நவ 14, 2026
Advertisement
1994-ல் ஹிந்தியில் வெளியான "பண்டிட் குயின்" திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக வலம் வந்த பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருந்தது. சீமா பிஸ்வாஸ் என்பவர் பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேகர் கபூர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 32 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல இயக்குனர் ஹனி தெரான் இயக்க உள்ளார். முதல் பாகத்தை தயாரித்த பாபி பேடி தான் இதையும் தயாரிக்கிறார்.
முதல் பாகம் பெரும்பாலும் பழிவாங்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களை மையமாகக் கொண்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் பூலான் தேவி காவல்துறையில் சரணடைந்த பிறகு 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த காலகட்டத்திற்குப் பிந்தைய அவரது வாழ்க்கையையும், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர் எதிர்கொண்ட சவால்களையும், சமூக மாற்றங்களுக்கான அவரது பயணத்தையும் இப்படம் பேசுகிறதாம்.
இது குறித்து தயாரிப்பாளர் கூறும்போது, "மக்கள் முதல் பாகத்தில் பார்த்த பூலான் தேவியின் வாழ்க்கையை விட அதற்குப் பின்னால் அவர் கடந்து வந்த பாதை மிக நீண்டது. அது பலரும் அறியாத உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்" என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…