பாலியல் தொல்லை : சிக்குகிறார் நடன இயக்குனர்
ஏப் 02, 2022
Advertisement
மும்பை:"பாலிவுட்"டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, 50, ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கு, நடனம் அமைத்துள்ளார். பல விருதுகளை பெற்ற இவர், சமீபத்தில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமான, "ஊ சொல்றியா... மாமா..." என்ற பாடலுக்கும் நடனம் அமைத்தார்.
கடந்த 2020ல், நடனக் குழுவில் இருந்த ஒரு பெண்ணை, கணேசும், அவரது உதவியாளரும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அந்தப் பெண் அளித்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்தார். இந்நிலையில், இந்த வழக்கில், மும்பை போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!