அரைகுறை ஆடையில் ரக்ஷா பந்தன் விளம்பரம் : எதிர்ப்பு எழுந்ததால் நீக்கம்
ஆக 27, 2026
Advertisement
பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் நடித்த "ஜிவா" நகைக்கடையின் ரக்ஷா பந்தன் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அனைத்து ஊடகங்களில் இருந்தும் அந்த விளம்பரத்தை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகைக்காக "ஜிவா" நகைக்கடை நிறுவனம் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்த விளம்பர படத்தை வெளியிட்டது. அதில், அவர் தன் சகோதரருக்கும் வளர்ப்பு நாய்க்கும் ராக்கி கட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த காட்சியில் அவர் அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததாகவும், ரக்ஷா பந்தன் சடங்கில் நாயை இடம்பெறச் செய்திருப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தன.
பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,யும் நடிகையுமான கங்கனா ரணாவத்தும் இந்த விளம்பரத்தை விமர்சித்தார். "ரக்ஷா பந்தன் போன்ற பாரம்பரிய பண்டிகைக்காக பெண்கள் அணிய ஏராளமான உடைகள் இருக்கும்போது, கவர்ச்சியான உடையை ஏன் தேர்வு செய்ய வேண்டும்" என, அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கீர்த்தி சனோன், "ஒரு பெண்ணின் உடையை வைத்து அவரது கலாசார மரியாதையை அளவிட முடியாது" என்றார்.
இந்த விவகாரத்தில் தொடர்பே இல்லாமல் காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆஜராகி, நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே, விளம்பரத்தை அனைத்து ஊடகங்களில் இருந்தும் நீக்க, "ஜிவா" நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: எந்த ஒரு சமூகத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பண்டிகைகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இருப்பினும் விளம்பரத்திற்கு எதிரான கருத்துகளை மனதில் கொண்டு, இந்த விளம்பரத்தை அனைத்து ஊடகங்களில் இருந்தும் நீக்குகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!