ஆபாச காட்சியா? : மெஹ்ரின் கோபம்
அக் 25, 2023
சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த் நடித்த "நெஞ்சில் துணிவிருந்தால்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாடா. பிறகு கதைப்படி ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் தேவையில்லை என்று, இப்படத்தில் அவர் நடித்திருந்த அனைத்துக் காட்சிகளையும் சுசீந்திரன் நீக்கினார். பின்னர் தெலுங்கில் பிசியான நடிகை ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தனுஷ் ஜோடியாக "பட்டாஸ்" படத்தில் நடித்தார்.
தற்போது அவர் "சுல்தான் ஆப் டெல்லி" என்ற இந்தி வெப்தொடரில் நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடரில் மவுனி ராய், விநய் பதக் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் மெஹ்ரின் ஒரு பணக்கார குடும்பத்தின் தலைவனுக்கு ஆசை நாயகியாக நடித்துள்ளார். இதில் அவர் பாலியல் தொடர்பான படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இதுகுறித்து பலரும் மெஹ்ரினை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாமா என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு மெஹ்ரின் தனது சமூக வலைத்தளத்தில் அளித்துள்ள பதிலில், “திருமண பந்தத்தில் கணவனால் நடத்தப்படும் பாலியல் உறவு காட்சியில் நடித்திருக்கிறேன். பல பெண்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்னை இது. ஆனால், அதை "ஆபாச காட்சி" என்று ஊடகங்கள் விவரிப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அந்த வார்த்தை தீவிரமான ஒன்றை சாதாரண விஷயமாக மாற்றி விடுகிறது. ஒரு நடிகையாக, அந்தக் கேரக்டருக்கு நியாயம் செய்வது என்னுடைய வேலை. எனவேதான் அந்தக் காட்சியில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!